நீதிமன்றத்தில் வைக்கப்பட்டிருந்த 140 கிலோ கிராம் கஞ்சாவை திருடிய நால்வர் கைது

#Arrest #Police #Kilinochchi #drugs #Lanka4 #sri lanka tamil news #Court
Prasu
2 years ago
நீதிமன்றத்தில் வைக்கப்பட்டிருந்த 140 கிலோ கிராம் கஞ்சாவை திருடிய நால்வர் கைது

கிளிநொச்சி நீதிமன்றத்தில் கைப்பற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்த 140 கிலோ கிராம் கஞ்சாவை திருடிய நால்வர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

கடந்த மாதம் கிளிநொச்சி நீதிமன்றத்தில் சான்றுப்படுத்தப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த கஞ்சா திருடப்பட்டிருந்தது. 

images/content-image/1699037194.jpg

இதனையடுத்து கிளிநொச்சி மாவட்ட குற்றத் தடுப்பு பொலிசார் விசாரணைகளை கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக கிளிநொச்சி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் உப்புல செனிவரத்தினவின் கீழ் இயங்கி வருகின்ற மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரின் பொறுப்பதிகாரி பி.ஐ.மங்கள தலைமையிலான பொலீஸார் இரகசிய தேடுதலை மேற்கொண்டிருந்த வேளையில் இந் நால்வரும் கைது செய்யப்பட்டனர்.

இதில் ஒருவர் நீதிமன்ற பணியாளர். இருவர் நீதிமன்ற சுத்திகரிப்பு மேற்பார்வையாளர்கள். கைதானவர்களில் மூன்று பேர் கிளிநொச்சியை சேர்ந்தவர்கள். 

images/content-image/1699037211.jpg

கைதான நீதிமன்ற பணியாளர் அம்பாறையை சேர்ந்தவர். நீதிமன்ற களஞ்சிய அறையை உடைத்து கஞ்சா திருடி, அதனை விற்பனை செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் நாளை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக பொலிசாரினால் தடுத்து வைக்க கோரிக்கை விடுக்கப்படவுள்ளது. இவர்களின் கஞ்சா வியாபாரத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4