ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு முன்பாக சத்தியாக்கிரக போராட்டம்!

#SriLanka #Protest #Srilanka Cricket
PriyaRam
2 years ago
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு முன்பாக சத்தியாக்கிரக போராட்டம்!

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு முன்பாக சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இலங்கை கிரிக்கெட் அணியின் படுதோல்விக்கு தற்போதைய தேர்வு குழு மற்றும் நிர்வாகமே காரணம் காரணம் என குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது.

images/content-image/2023/10/1699097437.jpg

இவ்வாறான பின்னணியில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாக குழு மற்றும் தேர்வு குழுவிற்கு எதிராக தாம் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர், தமது பதவிகளிலிருந்து அவர்களே இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நேற்று தெரிவித்திருந்தார்.

இந்த சூழ்நிலையில், ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு முன்பாக இந்த சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4