ஒரு கோடி ரூபாய் பணத்துடன் இலங்கை பிரஜை உள்பட நால்வர் கைது!

#SriLanka #Arrest #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
ஒரு கோடி ரூபாய் பணத்துடன் இலங்கை பிரஜை உள்பட நால்வர் கைது!

ஒருகோடி ரூபாய் பணத்துடன் அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை பிரஜை உட்பட நால்வர் தமிழக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சென்னை எம்.ஜி.ஆர்.நகர் பொலிஸ் அதிகாரிகள் வேன் ஒன்றுக்குள் இருந்த குறித்த நால்வரை விசாரணை செய்தபோது குறித்த நால்வரையும் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

இதன்போது குறித்த வேனை சோதனை செய்த பொலிஸார் சட்டவிரோத பணம் என சந்தேகிக்கப்படும் சுமார் ஒரு கோடிரூபாய் இந்திய பணத்தை கைப்பற்றியுள்ளனர். 

இந்நிலையில் அந்த பணத்துக்கான முறையான ஆவணங்கள் எதுவும் இருக்கவில்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இது குறித்து கைது செய்யப்பட்ட நால்வரிடமும் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4