சீன வெளிநாட்டு சிகரெட்டுக்களை நாட்டிற்கு கடத்திவந்த பெண் கைது!
சுமார் 3,060,000 மதிப்புள்ள சீன வெளிநாட்டு சிகரெட்டுக்களை நாட்டிற்கு கடத்திவந்த சீன பெண்மணி ஒருவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர், சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த 44 வயது அழகுக்கலை நிபுணர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அவர் சீனாவில் சிகரெட்டுகளை வாங்கி, மலேசியாவின் கோலாலம்பூருக்குப் பயணம் செய்து, பின்னர் மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் MH179 மூலம் BIA-க்கு வந்தடைந்தார்.
அவரது பயணப் பெட்டி மற்றும் முதுகுப்பையை சோதனையிட்டபோது, பல்வேறு சீன பிராண்டுகளைச் சேர்ந்த மொத்தம் 20,400 சிகரெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 102 அட்டைப் பெட்டிகளை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
சந்தேக நபரும், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே