பிரான்ஸில் சாரதி பேருந்து செலுத்துகையில் திடீர் சுகயீனமுற்றதால் விபத்து நேர்ந்துள்ளது
#France
#Accident
#physical_tension
#Bus
#Lanka4
#விபத்து
#லங்கா4
#Driver
#பிரான்ஸ்
#France Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
1 year ago
பேருந்து ஒன்றை செலுத்திக்கொண்டிருந்த சாரதி திடீரென சுகயீனமுற்றதால், தடுப்புச் சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானார்.
Courbevoie (Hauts-de-Seine) நகரில் இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றது. RATP நிறுவனத்துக்குச் சொந்தமான பேருந்து ஒன்று பயணிகள் எவரும் இல்லாமல், அதன் தரிப்பிடத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த நிலையில், அதிடீரென அதன் சாரதி சுகயீனமுற்றார்.
பேருந்து கட்டுப்பாடில்லாமல் சென்று தடுப்புச் சுவர் ஒன்றில் மோதியுள்ளது. இந்த விபத்தில் பேருந்தின் சாரதி சிறிய காயங்களுக்கு உள்ளானார். அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
Faubourg de l'Arche ட்ராம் நிறுத்தத்துக்கு அருகே இந்த விபத்து இடம்பெற்றது. 144 ஆம் இலக்க பேருந்து ஒன்றே விபத்துக்குள்ளானது. இரண்டு மணிநேரம் வரை அங்கு போக்குவரத்து தடைப்பட்டது.