ஈரான் அடக்குமுறை - மன்னிப்பு கோரிய ஜனாதிபதி
#Protest
#government
#President
#Iran
#Apologizes
Prasu
3 hours ago
ஈரானில் விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்தாண்டு டிசம்பரில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் ஏற்பட்டது.
இந்த போராட்டங்களினால் சுமார் 3000 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் போராட்டங்களின்போது பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட கடுமையான ஒடுக்குமுறை மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்காக ஈரான் ஜனாதிபதிமசூத் பெசெஷ்கியன் மன்னிப்புக் கோரியுள்ளார்.
ஈரானின் 47வது புரட்சி தின விழாவில் உரையாற்றிய அவர், போராட்டங்களின்போது பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தனது வருத்தத்தைத் தெரிவிப்பதாகவும், நடந்த சம்பவங்களுக்காக தாங்கள் வெட்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
(வீடியோ இங்கே )