கொஸ்கம பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் ஒருவர் உயிரிழப்பு!

#SriLanka #Lanka4 #GunShoot #sri lanka tamil news
Thamilini
2 years ago
கொஸ்கம பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் ஒருவர் உயிரிழப்பு!

கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஸ்வத்த வடக்கு பகுதியில் நேற்று (08.11) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியில் துப்பாக்கிப் பொடி ஏற்றப்பட்ட போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

அஸ்வத்த வடக்கு, புவக்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தவர் எனவும், சடலம் சம்பவ இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4