பொதுஜன பெரமுனவிற்கு புதிய தலைமைத்துவத்தை நியமிக்க நடவடிக்கை!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
பொதுஜன பெரமுனவிற்கு  புதிய தலைமைத்துவத்தை நியமிக்க நடவடிக்கை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன புதிய அரசியல் கூட்டமைப்பை உருவாக்குவது மற்றும் பொருத்தமான தலைமைத்துவத்தை நியமிப்பது குறித்து டிசம்பர் மாத நடுப்பகுதிக்குள் தீர்மானிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பொதுஜன பெரமுனவின் இரண்டாவது பொது மாநாட்டை டிசம்பரில் நடத்தவும் அதற்கு முன்னதாக இந்த புதிய கூட்டணியின் தலைமையை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அடுத்த ஆண்டு தேர்தல் ஆண்டு என்பதால் அது தொடர்பான பல முக்கிய முடிவுகள் இந்த மாநாட்டில் எடுக்கப்பட உள்ளன. 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பொதுஜன பெரமுனவின் சிறந்த தலைவராக நியமிப்பது தொடர்பில் கட்சியின் சிரேஷ்டர்கள் மத்தியில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4