இங்கிலாந்தில் முக்கிய பதவிகளில் ஏற்பட்ட திடீர் மாற்றம் : சுயெல்லா பிரேவர்மேனின் பதவி பறிபோனது!

#SriLanka #world_news #Lanka4 #sri lanka tamil news #England
Thamilini
2 years ago
இங்கிலாந்தில் முக்கிய பதவிகளில் ஏற்பட்ட திடீர் மாற்றம் : சுயெல்லா பிரேவர்மேனின் பதவி பறிபோனது!

பிரித்தானியாவின் உள்துறை செயலாளரான சுயெல்லா பிரேவர்மேன் இன்று (13.11) பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

இஸ்ரேல் - ஹமாஸ் மோதலால் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற நிலை குறித்து சுவெல்லா பிரேவர்மேன் அண்மையில் விமர்சித்திருந்த நிலையில், இதற்கு கடும் எதிர்ப்பு உருவாகியிருந்தது. 

இந்த சூழ்நிலையில், அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், புதிய உள்துறை அமைச்சராக முன்னர் வெளியுறவு அமைச்சராக கடமையாற்றியஜேம்ஸ் கிளவெர்லி நியமிக்கப்பட்டுள்ளார். 

அத்துடன் இங்கிலாந்தின் முன்னாள்  பிரதமர் டேவிட் கேமரூன் புதிய வெளியுறவு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4