ஜனாதிபதி அநுரவுக்கு எதிராக எதிர்காலத்தில் வழக்குத் தொடரப்படும் – உதய கம்மன்பில எச்சரிக்கை!

#SriLanka #LANKA4 #Warning #President #AnuraKumaraDissanayake #Udaya Kammanpila #Legal
Abi
1 hour ago
ஜனாதிபதி அநுரவுக்கு எதிராக எதிர்காலத்தில் வழக்குத் தொடரப்படும் – உதய கம்மன்பில எச்சரிக்கை!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்குத் தொடரப்படும் என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், நாட்டின் 22 மில்லியன் மக்களுக்கும் தலைவராகவும் முப்படைகளின் தளபதியாகவும் விளங்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அச்சமடையும் சுபாவம் கொண்டவராக இருப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.

ஊன்றுகோல் மற்றும் ஊசிகளுக்குக்கூட அஞ்சும் ஒருவரிடம் நாட்டின் தேசிய பாதுகாப்பை எவ்வாறு ஒப்படைக்க முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

அச்சம் என்பது மனித இயல்பாக இருந்தாலும், நாட்டின் முப்படைகளின் தளபதி என்ற பொறுப்பில் இருப்பவர் தனது அச்சத்தை வெளிப்படுத்தக் கூடாது எனவும், தளபதியே அச்சமடைகிறார் என்பதை மக்கள் உணர்ந்தால் அவர்கள் மத்தியில் பதற்றம் ஏற்படக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், எதிர்காலத்தில் ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் சந்தர்ப்பத்தில், தன்னிடம் வந்து கெஞ்சி வழக்குகளை வாபஸ் பெறுமாறு கோரக்கூடாது எனவும் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அத்துடன், ஜனாதிபதி தனது கருத்துக்களை வெளியிடும்போது மிகவும் கவனமாகச் செயற்பட வேண்டும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!