World cup இறுதி போட்டி இன்று : இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகள் மோதுகின்றன!

#Lanka4 #sports #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
World cup இறுதி போட்டி இன்று : இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகள் மோதுகின்றன!

2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று (19.11) நடைபெற உள்ளது.  

இந்தியாவின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில்  நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளது. 

ஆரம்ப சுற்றுப் போட்டிகளில் 09 போட்டிகளில் 09 வெற்றிகளைப் பெற்றுள்ள இந்திய அணி, மிகவும் வலுவான மனநிலையுடன் இறுதிப் போட்டிகளுக்குள் பிரவேசித்து வருகின்றமை விசேட அம்சமாகும்.  அவர்கள் பங்கேற்ற 9 போட்டிகளில், ஒரு போட்டியில் கூட தோல்வியடையவில்லை என்பது சிறப்பம்சமாகும். 

இந்தியா அனைத்து போட்டிகளிலும் மிக எளிதாக வெற்றி பெற்றது. ஆரம்ப சுற்றில் இரு பலம் வாய்ந்த அணிகளாக இருந்த தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் என கருதப்பட்டாலும், அந்த இரு நாடுகளும் இந்தியாவுக்கு எதிராக கடும் தோல்வியை சந்தித்தன. 

அரையிறுதியில் நியூசிலாந்தை இந்தியா எளிதாக வீழ்த்தியது. இருப்பினும், அரையிறுதியில் நியூசிலாந்து மட்டுமே முழு தொடரிலும் இந்தியாவுக்கு அழுத்தத்தையும் கொடுக்க முடிந்தது

இன்றைய போட்டியில் இந்திய அணியின் எதிரணியான அவுஸ்திரேலியாவும் ஆரம்ப சுற்றில் இந்தியாவிடம் 06 விக்கெட்டுகளால் தோல்வியடைந்தது. ஆகவே இன்றைய போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும். 

இந்த ஆண்டு எப்படியாவது இந்தியா உலகக் கோப்பையை வெல்லும் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. அதற்காக ஐசிசி விதிகள், தொழில்நுட்பம், ஆடுகளங்களைப் பயன்படுத்துதல் என பல்வேறு உத்திகளை இந்தியா கையாண்டுள்ளதாக சமூக வலைதள செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4