மலையக மக்களுக்கு விடுக்கப்பட்டுள் எச்சரிக்கை!

#SriLanka #weather #NuwaraEliya
PriyaRam
2 years ago
மலையக மக்களுக்கு விடுக்கப்பட்டுள் எச்சரிக்கை!

மத்திய மலை நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தின் பல பிரதேசங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.

தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக காசல் ரி, மவுசாக்கலை, லக்ஸபான, நவ லக்ஸபான, பொல்பிட்டிய, கெனியோன் உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வான் பாயும் அளவினை எட்டியுள்ளன.

இந்நிலையில் இந்த நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் எந்த வேளையிலும் திறக்கப்படலாம் என்பதனால் நீர்த்தேக்கத்தின் கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

images/content-image/2023/11/1701173762.jpg

நேற்று இரவு முதல் நோட்டன் பிரிஜ் பகுதிக்கு பெய்து வரும் கடும் மழை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தில் அனைத்து வான் கதவுகளிலும் நீர் வான் பாய்ந்து வருகின்றன.

இதனால் களனி கங்கைக்கு சமீபமாக வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நீர்போசன பிரதேசங்களில் கிடைத்து வரும் அதிக மழை வீழ்ச்சி காரணமாக நீர் மின் உற்பத்தியும் உச்ச அளவில் நடைபெற்று வருவதாக மின்சார துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4