2024ம் ஆண்டு இலங்கை அணிக்கான தொடர்கள் அறிவிப்பு

#SriLanka #Lanka4 #Cricket #sports #match #sri lanka tamil news #2024
Prasu
2 years ago
2024ம் ஆண்டு இலங்கை அணிக்கான தொடர்கள் அறிவிப்பு

2024ஆம் ஆண்டில் இலங்கை தேசிய அணி பங்கேற்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் தொடர்பிலான நாட்காட்டி ஐ.சி.சி.யின் தடைகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் சிம்பாப்வேக்கு எதிராக இலங்கையில் ஆரம்பமாகும் தொடருடன் இந்த நாட்காட்டி ஆரம்பமாவதுடன், சிம்பாப்வேக்கு எதிராக மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20 போட்டிகளில் இலங்கை அணி விளையாட உள்ளது.

சிம்பாப்வேக்கு எதிரான தொடரை தொடர்ந்து ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி விளையாட உள்ளது.

அதனை தொடர்ந்து இலங்கை அணி அனைத்து வடிவ போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்க பங்களாதேஷுக்குச் செல்ல உள்ளது.

images/content-image/1701247327.jpg

பங்களாதேஷுக்கு எதிரான தொடரை தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் ஐசிசி T20 உலகக் கிண்ண தொடரில் இலங்கை அணி விளையாடும்.

இதேவேளை,மேற்கிந்திய தீவுகள், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் டி20 உலகக் கிண்ணத்தை தொடர்ந்து இலங்கையில் நடைபெறும் தொடர்களில் பங்கேங்க சுற்றுப்பயணங்களை மேற்கொள்ள உள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4