தேர்தலை இலக்கு வைத்து பிரச்சாரத்திற்கு தயாராகும் மொட்டு கட்சி!

#SriLanka #Sri Lanka President #Election #SLPP
Mayoorikka
2 years ago
தேர்தலை இலக்கு வைத்து பிரச்சாரத்திற்கு தயாராகும் மொட்டு கட்சி!

தேர்தலை இலக்கு வைத்து ஜனவரி முதல் கிராமிய மட்டத்திலான 'தேர்தல் பிரச்சார' நடவடிக்கையை மேற்கொள்வதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

 ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய சம்மேளனம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ளது.

 இதன்போது கட்சியின் முக்கிய சில பதவிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதுடன், புதிய நியமனங்களும் இடம்பெறவுள்ளன . 2024 வரவு - செலவுத் திட்டக் கூட்டத்தொடர் டிசம்பரில் முடிவடைந்த பின்னர் பாராளுமன்றம் ஜனவரி வரை ஒத்திவைக்கப்பட்டு, ஒருமாத கால விடுமுறை வழங்கப்படும்.

 அந்த காலப்பகுதியிலேயே வழமையாக பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணங்களில் ஈடுபடுவார்கள்.

 எனவேதான் ஜனவரி முதல் முழு வீச்சுடன் பிரச்சாரத்தில் இறங்குவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

 ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்கள் அடுத்த வருடம் நடத்தப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4