புதிய பொருளாதார கட்டமைப்பிற்குள் செல்வதே சிறந்தது என்கிறார் ரணில்!

#SriLanka #Ranil wickremesinghe #Economic
PriyaRam
2 years ago
புதிய பொருளாதார கட்டமைப்பிற்குள் செல்வதே சிறந்தது என்கிறார் ரணில்!

நாட்டின் பொருளாதார ஸ்திரநிலையை ஏற்படுத்த கடுமையான பொருளாதார மறுசீரமைப்புக்கள் அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் ஆரம்பமான 2023 இலங்கை பொருளாதார மாநாட்டின் ஆரம்ப உரையை ஆற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். 

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த சில மாதங்களில், எமது நாட்டிலுள்ள அனைத்து கடன் வழங்குநர்களுடனும் முழுமையான நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டோம். இலங்கையின் வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லெண்ணம் காரணமாகவே இந்தச் செயற்பாட்டில் வெற்றிபெற முடிந்தது.

இலங்கையில் கடன் மறுசீரமைப்புக்கு கொள்கையளவில் உடன்பாடு வழங்கிய முதலாவது வங்கி சீனா எக்ஸிம் வங்கியாகும். உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழு மிக விரைவில் கொள்கையளவில் இதேபோன்ற உடன்பாட்டை வழங்கும் என்று நம்புகிறோம்.

images/content-image/2023/11/1701256852.jpg

மேலும், எதிர்வரும் டிசம்பரில் இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் முதல் மீளாய்வை சர்வதேச நாணய நிதியம் நிறைவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி நிறைந்த பொருளாதாரத்திற்கு நாம் செல்ல வேண்டும்.

பொருளாதார நெருக்கடியின் போது மேடைகளில் இருந்து தீர்வுகளைப் பற்றி பேசிய அரசியல் தலைவர்கள் இந்த திட்டத்தை அங்கீகரிக்கவில்லை. ஆனால் அவர்கள் இதுவரை எந்த தீர்வையும் முன்வைக்கவில்லை. 

ஒரு நாடாக, நாம் என்றென்றும் வங்குரோத்து நிலையில் இருக்க முடியாது. எனவே, நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்கும் வகையில் தற்போது செயல்பட்டு வருகிறோம். நாங்கள் போட்டித்தன்மையுடன் செயற்பட விரும்பாததால் ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு நாங்கள் தயாராக இல்லை.

ஆனால் இப்படியே தொடர்ந்து செல்ல முடியாது. இதுவே எங்களுக்குக் கிடைத்துள்ள கடைசி வாய்ப்பாகும். எங்களிடம் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் உள்ளன.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமானால், இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பிற்குள் நாம் செயல்பட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4