நடிகர் விஜயகாந்தின் உடல்நலம் குறித்து தகவல் வெளியிட்ட மனைவி(காணொளி)

#Actor #Hospital #Body #wife #report #Tamilnews #conditions
Prasu
2 years ago
நடிகர் விஜயகாந்தின் உடல்நலம் குறித்து தகவல் வெளியிட்ட மனைவி(காணொளி)

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 18-ம் தேதி முதல் ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அவ்வப்போது அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று (நவம்ர் 29) மட்டுமே இரண்டு அறிக்கைகள் வெளியிடப்பட்டன. அதில் கடைசியாக வெளியான அறிக்கையில், "தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்தின் உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. 

அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது," என குறிப்பிடப்பட்டு இருந்தது.

 இந்த நிலையில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்த் கேப்டன் நலமாக இருக்கிறார் என்றும் விரைவில் முழு உடல் நலத்துடன் வீடு திரும்பி, அனைவரையும் சந்திப்பார் என்றும் தெரிவித்து வீடியோ வெளியிட்டு உள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4