சம்பள உயர்வு கோரி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் தீர்மானம்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
சம்பள உயர்வு கோரி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் தீர்மானம்!

சம்பள உயர்வு வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் வாரம் முதல் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.  

இதன்படி ஒக்டோபர் 23ஆம் திகதி கூடிய அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் துறைமுக ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு இடைநிறுத்தப்பட்டது. 

இதனால் துறைமுக ஊழியர்கள் மத்தியில் ஊதிய உயர்வு குறித்த பிரச்சினை எழுந்துள்ளது. 

இந்நிலையில் அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் இது தொடர்பில் சந்தித்து கலந்துரையாடினார். எனினும், பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நிரோஷன் கோரகனே தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு குறித்த சங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4