அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தைப் புறக்கணித்த கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்ரஸ்!

#SriLanka #Ampara
PriyaRam
2 years ago
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தைப் புறக்கணித்த கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்ரஸ்!

அம்பாறையில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பாக எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வானது அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரமவின் ஒருங்கிணைப்பில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏ.எல்.எம்.அதாஉல்லா, டபிள்யூ. வீரசிங்க, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோரின் தலைமையில் அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது. 

images/content-image/2023/11/1701416352.jpg

இதன்போது,மாவட்டத்தின் நகர அபிவிருத்தி, சுற்றுலாத்துறை மேம்படுத்தல், குடி நீர் சம்பந்தமான பிரச்சினைகள் இன்னும் முக்கிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பது சம்பந்தமான விடயங்கள் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது. 

இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம்.எம்.முஷாரப், விமலவீர திஸாநாயக்க, திலக் ராஜபக்ஸ, மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்டத்திலுள்ள திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பாதுகாப்பு உயர் அதிகாரிகள், கல்வி அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பாக எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4