2024ம் ஆண்டு T20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் 20 அணிகள் அறிவிப்பு

#America #T20 #Cricket #WorldCup #sports #ICC #westIndies
Prasu
2 years ago
2024ம் ஆண்டு T20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் 20 அணிகள் அறிவிப்பு

2024ஆம் ஆண்டில் நடைபெறும் டி20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் 20 அணிகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன. மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா இணைந்து டி20 உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்த உள்ளன. 

அடுத்த ஆண்டு ஜுன் 4ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை டி20 உலகக் கிண்ணப் தொடர் நடைபெறவுள்ளது. ஆன்டிகுவா & பார்புடா, பார்படோஸ், டொமினிகா, கயானா, செயிண்ட் லூசியா, செயிண்ட் வின்சென்ட் & கிரீனடைன்ஸ், டிரினாட் & டொபாகோ, அமெரிக்காவின் சில பகுதிகளில் ஆகிய இடங்களில் டி20 உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் மொத்தம் 20 நாடுகள் பங்கேற்கின்றன. இவற்றுள் 19 நாடுகள் தங்களது இடத்தை உறுதி செய்திருந்த நிலையில், இந்தப் பட்டியலில் உகாண்டா அணியும் இன்று இணைந்துள்ளது.

2024 டி20 உலகக் கோப்பைக்கு தகுதிபெற்றுள்ள 20 அணிகளின் விவரம் வருமாறு, போட்டியை நடத்தும் நாடுகள் - மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்கா அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேச், நமீபியா, உகாண்டா, கனடா, நேபாளம், ஓமன், பப்புவா நியூ கினியா, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய நாடுகள் பங்கேற்க உள்ளன.

 இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவுகளாக விளையாடவுள்ளன. ஒவ்வொரு பிரிவில் இருந்தும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்தச் சுற்றுக்குத் தகுதி பெரும். சூப்பர் 8 சுற்றில் மீண்டும் 8 அணிகள் 2 பிரிவுகளாக விளையாடும். இதில் 2 பிரிவுகளிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4