மூன்று உறுப்பினர்களுக்கு ஒருமாத காலத்திற்கு பாராளுமன்றம் செல்ல தடை!

#SriLanka #Parliament #Investigation #Attack
Mayoorikka
2 years ago
மூன்று உறுப்பினர்களுக்கு  ஒருமாத காலத்திற்கு பாராளுமன்றம் செல்ல தடை!

பாராளுமன்ற உறுப்பினர்களான டயனா கமகே, சுஜித் சஞ்சய பெரேரா மற்றும் ரோஹன பண்டார ஆகியோரின் பாராளுமன்ற சேவையை ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்துவதற்கு பாராளுமன்ற நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் குழு தீர்மானித்துள்ளது.

 இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோருக்கு இடையில் கடந்த ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பிலேயே சிறப்புரிமைகள் குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

 குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ஷ இது தொடர்பான தீர்மானத்தை இன்று (01) பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4