யாழில் நீதிமன்ற விசாரணைக்கு இடையூறு விளைவித்த பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியில்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
யாழில் நீதிமன்ற விசாரணைக்கு இடையூறு விளைவித்த பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியில்!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு இடையூறு விளைவித்த பொலிஸ் உத்தியோகத்தர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.  

மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் துன்னாலை பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 

நீதிமன்றத்திற்கு சாட்சியமளிப்பதற்காக சென்றிருந்த குறித்த நபர், நீதிமன்ற அமர்வில் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதனையடுத்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்த நீதிமன்ற பொலிஸார் பருத்தித்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.  

சந்தேக நபரை நாளை (05.12 ) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் சட்டவைத்திய அதிகாரியின் முன் முற்படுத்தி,  பரிசோதனைக்கு உட்படுத்தவும்  உத்தரவிட்டார்.  

அதேவேளை குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் மது போதையிலையே குழப்பத்தை ஏற்படுத்தினார் என தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4