ஜா-எல ஹோட்டல் ஒன்றில் நபர் ஒருவர் படுகொலை : சந்தேக நபர் தப்பியோட்டம்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
ஜா-எல ஹோட்டல் ஒன்றில் நபர் ஒருவர் படுகொலை : சந்தேக நபர் தப்பியோட்டம்!

ஜா-எல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து நிகழ்வொன்றில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 

ஜா-எல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த நபர் விருந்தின் போது மற்றொரு நபருடன் தகராறு செய்ததாகவும், மற்றைய நபர் அவரை தாக்கி பின்னர் நீச்சல் குளத்தில் தள்ளியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை ஜா-அல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4