இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

#SriLanka #weather #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவில் "மிஜாம்" புயல் இந்தியாவின் ஆந்திரப் பகுதியின் கரையோரத்தில் கரையைக் கடந்துள்ளதுடன் படிப்படியாக பலவீனமடைந்து வருகிறது. 

இதன்காரணமாக மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் குறிப்பாக காலை வேளையில் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.  

அதேபோல் சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் சுமார் 2.00 மணிக்குப் பிறகு பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது. 

 இடியுடன் கூடிய மழை,தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4