முதலீட்டு திட்டத்திற்கு பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ள நுவரெலியா அஞ்சல் நிலைய கட்டடம்!

#SriLanka #NuwaraEliya
PriyaRam
2 years ago
முதலீட்டு திட்டத்திற்கு பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ள நுவரெலியா அஞ்சல் நிலைய கட்டடம்!

நுவரெலியா அஞ்சல் நிலைய கட்டிடத்தை முதலீட்டு திட்டத்திற்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

images/content-image/2023/12/1701844659.jpg

இதன் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்படும் என்றும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தபால் நிலையத்திற்கு மாற்று இடம் வழங்கப்பட்டதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்படும் என்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர மேலும் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4