சீதுவயில் நபர் ஒருவர் வெட்டி படுகொலை!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
சீதுவயில் நபர் ஒருவர் வெட்டி படுகொலை!

சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லியனகேமுல்ல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் நபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.  

குறித்த சம்பவம் இன்று (07.12) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  சீதுவ பொலிஸாருக்கு கிடைத்த செய்தியின் அடிப்படையில் இது தொடர்பான விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

லியனகேமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய நபரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் இறுதி சடங்கில் கலந்து கொண்ட போது தனிப்பட்ட தகராறு காரணமாக இருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கி உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.  

சடலம் பொலிஸ் பாதுகாப்பில் சம்பவ இடத்தில் வைக்கப்பட்டது. கொலைச் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4