பயங்கரவாத தடைச்சட்டம் - சர்வதேச வாக்குறுதியை மீறிய அரசாங்கம்; ஜி.எல்.பீரிஸ் காட்டம்!

#SriLanka #G. L. Peiris
PriyaRam
2 years ago
பயங்கரவாத தடைச்சட்டம் - சர்வதேச வாக்குறுதியை மீறிய அரசாங்கம்; ஜி.எல்.பீரிஸ் காட்டம்!

புதிய சட்டம் உருவாக்கப்படும் வரை பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்தப் போவதில்லை என சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் மீறி விட்டதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் மீறி, தமக்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அரசாங்கம் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

images/content-image/2023/12/1702010959.jpg

இவ்விடயம் தொடர்பில் கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள நிலையில் வாக்குறுதியை மீறி விட்டு புதிய வாக்குறுதிகளை வழங்கினால் அதனை சர்வதேசம் ஏற்றுக்கொள்ளாது என்றும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

சர்வதேசத்துடன் இணக்கமாக செயற்படுகிறோம் என்று பேச்சளவில் குறிப்பிடுவதால் மாத்திரம் முன்னேற்றமடைய முடியாது என்றும் இலங்கையின் உள்ளக விவகாரங்களில் சர்வதேசம் தலையிடும் சூழலை நல்லாட்சி அரசாங்கமே உருவாக்கியது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4