சுவிஸ் நாட்டில் கட்டிய வீட்டை வாங்குவது சிறந்ததா? அல்லது புதிதாக காணி வாங்கி நீங்களே கட்டுவது சிறந்ததா?
சுவிஸ் நாட்டில் ஈழ தமிழர்களில் வசதியானவர் முதல் வசதி இல்லாதவர் வரை சொந்த வீடு வாங்க முயல்கிறார்கள். பலர் வாங்கியும் இருக்கிறார்கள் பலர் தேடிக்கொண்டும் உள்ளார்கள். வீடு வாங்கியவர்களில் 99% ஆனவர்களுக்கு அது ஒரு நல்ல முதலீடாக அமைந்துள்ளது.
உதாரணத்துக்கு சுவிஸ் சூரிச் மாநிலத்தில் 10 வருடத்துக்கு முன்னர் 8 லட்சம் சுவிஸ் பிராங்குகளிற்க்கு வாங்கிய வீடுகள் இப்பொழுது குறைந்தது 13-15 லட்சம் சுவிஸ் பிராங்குகளுக்கு விற்பனையாகிறது. இக்காரணத்தை அடிப்படையாக வைத்து மற்றய தமிழ் மக்களும் வீடு வாங்க முயல்கிறார்கள்.
6 வருடங்களுக்கு முன்னர் சுவிஸ் சட்டப்படி வீடு வாங்க அவரவரின் ஓய்வூதிய பணத்தை முழுமையாக 20% முற்கட்டணத்தை முழுமையாக உபயோகிக்கலாம். அதனால் பலர் அதை மட்டும் வைத்து வீடுகளை வாங்கினார்கள். இப்பொழுது அச்சட்டம் மாற்றப்பட்டு பல சட்டங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்பொழுது சுமார் 6 வருடங்களாக தாம் இருக்க வீடு வாங்க முற்கட்டணத்தில் 10 வீதத்தை பணமாக கட்டவேண்டும். மிகுதி 10 வீதத்தை மட்டுமே ஓய்வூதியத்தில் எடுக்க முடியும். அதற்குள்ளும் பல கட்டுப்பாடுகள் உண்டு. சரி விடயத்துக்கு வருவோம். ஒருவர் கட்டிய வீட்டை வாங்குவதா? வீட்டை கட்டுவதா சிறந்தது? எது நன்மை பயற்க்கும்? எது தீமை என பார்ப்போம்.
சுவிஸ் நாட்டில் ஒரு வீட்டைக்கட்ட 14-20 நிறுவனங்கள் வேண்டும். அதை விட வீடு கட்ட சுவிஸ் சட்டம் மாநிலத்துக்கு மாநிலம் கிராமத்துக்கு கிராமம் தெருவுக்கு தெரு வித்தியாசப்படும். அதனால் வீடு கட்டும் அனுமதி எடுக்க குறைந்தது 6 வாரம் முதல் கால வரையறை அற்ற காலங்கள் பிடிக்கும். எமது அனுபவத்தில் 4 வாரம் தொடக்கம் 6 வாரம் வரை காலம் எடுத்ததும் அனுமதி கிடைத்த பின்னர் தான் வீடு கட்ட முடிந்தது.
இதைவிட வீடு கட்டும் போது நாம் வீடு கட்டும் நிறுவனங்கள் திவாலானாலோ, கட்டுமான பொருள் விலை அதிகரித்தாலோ வீட்டு சொந்தக்காரரே பொறுப்பேற்கவேண்டும். ஒரு வீட்ட நாமே கட்டுவதால் கட்டும் விலையில் இருந்து கிட்டதட்ட 10-15% ஐ இலாபமாக அடைய முடியும். ஆனால் வீடு கட்ட உதவும் நிறுவனங்களில் ஒன்றேனும் திவாலானாலோ நிறுத்தினாலோ உங்களுக்கு வரும் இலாபத்தைவிட அதிக தொகை நஸ்டம் ஏற்படும்.
மேலும் பல உதாரணங்களையும் அனுபவங்களையும் எமது SHELVAZUG IMMOBILIEN நிறுவனத்தின் 27 வருட அனுபவத்தை வைத்து கூறுவதானால் அதிக விலை கொடுத்து வாங்கினாலும் நல்ல சுவிஸ் நிறுவனங்கள் கட்டிய வீட்டை பார்த்து வாங்குவதே உங்களின் எதிகாலத்துக்கு நல்லது.
அதைவிட இப்பொழுது வீடு கட்டும் உரிமம் எடுப்பது மிக மிக கடினம். அது கிடைத்தாலும் வீடு கட்டப்போகும் காணிக்கு அருகில் இருக்கும் நான்கு அயலவர்கள் அனுமதியும் வேண்டும். அவர்கள் ஏதாவது தடை உத்தரவு செய்து சட்ட நடவடிக்கை எடுத்தால் அதற்க்கான உங்களுக்கு சாதகமாக அமையும்வரை நீங்கள் பொறுத்திருக்கவேண்டும்.
இப்பொழுது உள்ள போர் காரணத்தால் கட்டிட பொருட்கள் விலை அதிகரித்தால் வங்கி உங்களுக்கு ஒதுக்கிய பணத்தை தவிர மேலதிக தொகையை நீங்களே கையால் போட்டு வீட்டைக் கட்டவேண்டும். எனவே தற்பொழுது உள்ள உலக ஓட்டத்தில் கட்டிய வீட்டை நீங்கள் வாங்குவதே சிறந்தது என எமது அனுபவத்தை வைத்து எமது SHELVAZUG IMMOBILIEN நிறுவனம் சிபார்சு செய்கிறது.
மேலும் வீடு வாங்க,விற்க, கட்ட,திருத்த மற்றும் வீடு வாங்க வீட்டுக்கடன் போன்ற உதவிகளையும் ஆலோசனைகளையும் எம்மிடம் பெறலாம்.
SHELVAZUG IMMOBILIEN
RIEDSTRASSE 01
6343 ROTKREUZ
041 790 64 63
079 514 64 28