மனித உரிமைகள் மீறப்படும்போது அதை வேடிக்கை பார்ப்பதுதான் ஐநாவின் வேலையா? ரவிகரன் கேள்வி!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
மனித உரிமைகள் மீறப்படும்போது அதை வேடிக்கை பார்ப்பதுதான் ஐநாவின் வேலையா? ரவிகரன் கேள்வி!

மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று முதலில் வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தீர்வை கூறுங்கள் என்றும், சர்வதேச மனித உரிமைகள் தினத்தை அனுஷ்டிப்பது பிழை எனவும்  முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.  

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று (10.12) கடைப்பிடிக்கப்படுகின்ற நிலையில், இதனை முன்னிட்டு வடக்கு, கிழக்கில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், காணாமலாக்கப்பட்ட உறவுகள் 2500 நாட்களுக்கு மேலாக தொடர்ச்சியாக வீதிகளில் நின்று தம் உறவுகளுக்காக போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.ஆனால் முடிவுகள் எதுவுமில்லை. இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம். 

மனித உரிமை ஆணையக்குழு சம்பந்தமாக அல்லது ஐநா சம்பந்தமாகவோ எமக்கு எந்த தீர்வும் தரவில்லை. எங்கள் நிலங்கள் பறிக்கப்படுகின்றன, மதங்கள் அழிக்கப்படுகின்றன, கடலிலே மீன்பிடிக்க முடியவில்லை, வயலிலே பயிர்கள் , விவசாயம், தோட்டங்கள் செய்ய முடியவில்லை, காணாமலாக்கப்பட்ட உறவுகளை தேடி கிடைக்கவில்லை, சிறையிலிருப்பவர்களை விடுவிக்கவில்லை.இவ்வாறு இலங்கை அரசாங்கம் செய்யும் போது அதனை பொறுத்து வேடிக்கை பார்ப்பதுதான் ஐநாவின், மனித உரிமை ஆணைக்குழுவின் வேலை. .?  

மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்று முதலில் இலங்கையில் வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தீர்வினை கூறுங்கள் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை அனுஷ்டிப்பது பிழை என்பதை சுட்டிக்காட்டுகிறேன் என மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4