ஹற்றன் பள்ளிவாசலின் பாதுகாப்பு ஊழியர் படுகொலை!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
ஹற்றன்  பள்ளிவாசலின் பாதுகாப்பு ஊழியர் படுகொலை!

ஹற்றன் நகரில் அமைந்துள்ள ஜும்மா பள்ளிவாசலின் பாதுகாப்பு ஊழியர் கொலை செய்யப்பட்ட பள்ளிவாசலின் உண்டியலில் பணம் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு வருடங்களாக இப்பள்ளி வாசலில் பாதுகாப்பு கடமையில் இருந்து வந்த 67 வயதான எம்.இபாராஹிம் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

 இப்பாதுகாப்பு ஊழியரின் தலையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக ஹற்றன் பொலீசார் தெரிவிக்கின்றனர்.

 சந்தேக நபர் பள்ளிவாசல் மதிலால் பாய்ந்து பாதுகாப்பு ஊழியரின் அறைக்குள் செல்வது பின் உண்டியல் பணத்தை திருடுவது போன்ற காட்சிகள் பள்ளிவாசலில் உள்ள CCTV கெமராவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. 

நீதவான் களப்பிரசோதனையின் பின் மரண விசாரணை மற்றும் நீதிமன்ற வைத்திய அதிகாரியின் பரிசோதனைகள் இடம் பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4