இவ்வருடத்தில் மாத்திரம் முவ்வாயிரத்திற்கும் மேற்பட்ட இலஞ்ச ஊழல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இவ்வருடத்தில் மாத்திரம் முவ்வாயிரத்திற்கும் மேற்பட்ட இலஞ்ச ஊழல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன!

இவ்வருடம் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் 3000க்கும் அதிகமான இலஞ்ச முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  

ஜனவரி 1ஆம் திகதி முதல் நவம்பர் 21ஆம் திகதி வரை 3,255 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவற்றுள் கணிசமான எண்ணிக்கையானது அரச ஊழியர் கட்டமைப்பின் செயற்பாடுகளின் அடிப்படையில் பெறப்பட்ட முறைப்பாடுகளாகும் எனவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. 

 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக கிட்டத்தட்ட 100 முறைப்பாடுகளும், அதிபர்களுக்கு எதிராக கிட்டத்தட்ட 50 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  

கிடைக்கப்பெற்ற இலஞ்ச முறைப்பாடுகளுடன் ஒப்பிடுகையில் விசாரணைப் பணிகளைத் தொடர்வதற்கு ஆணைக்குழுவில் உள்ள வெற்றிடங்களை விரைவாக நிரப்ப வேண்டிய தேவை இருப்பதாகவும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4