கிளிநொச்சியில் வீசிய பலத்த காற்று: பல வீடுகளில் தூக்கி எறியப்பட்ட கூரைகள்
#SriLanka
#Kilinochchi
#weather
#Disaster
Mayoorikka
2 years ago
கிளிநொச்சியில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட பலத்த காற்றினால் வீடுகளின் கூரைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
கிளிநொச்சி கண்டவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை கிராம அலுவலர் பிரிவில் நேற்று இரவு திடீரென வீசிய காற்று காரணமாக 8 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன.

அத்துடன் குறித்த காற்றினால் பயன் தரக்கூடிய மாமரம் மற்றும் வாழை ஆகியன சரிந்துள்ளதுடன், வீட்டு வளர்ப்பு கோழிகள் 30 இறந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவினருக்கு இன்றைய தினம் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக கண்டவளை பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.




இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே