சிறைச்சாலை நெருக்கடியை குறைக்க திட்டம் - சந்தேகநபர்களை வீட்டுக்காவலில் வைப்பதற்கு தயாராகும் புதிய சட்டம்!

#SriLanka #Prison #Law #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #house arrest
Thamilini
1 hour ago
சிறைச்சாலை நெருக்கடியை குறைக்க திட்டம் - சந்தேகநபர்களை வீட்டுக்காவலில் வைப்பதற்கு தயாராகும் புதிய சட்டம்!

சிறைச்சாலைகளில் ஏற்படும் நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொருத்தமான வழக்குகளில், நீதிமன்றக் காவல் அல்லது சிறைத்தண்டனைக்கு மாற்றாக, சந்தேக நபர்களையும் தண்டனை பெற்றவர்களையும் வீட்டுக் காவலில் வைக்க அனுமதிக்கும் சட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

 நீதிமன்றக் காவலுக்கு மாற்றாக வீட்டுக் காவலுக்கான விதிகளை நிறுவுவதற்காக அமைச்சரவையால் கொள்கை ஒப்புதல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, இதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. 

இதற்கமைய சட்ட வரைவாளர் இது தொடர்பான சட்டத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

 முன்மொழியப்பட்ட இந்தச் சட்டம், பொருத்தமான வழக்குகளில் வீட்டுக் காவலைப் பயன்படுத்துவதற்கான ஒரு சட்டக் கட்டமைப்பை வழங்கும் என்றும், நீதித்துறை மேற்பார்வையை உறுதி செய்வதோடு நாட்டின் சிறை அமைப்பின் மீதான அழுத்தத்தையும் குறைக்கும் என்றும் எதிசர்பார்க்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4