சீரற்ற வானிலை: கிளிநொச்சியில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

#SriLanka #Kilinochchi #weather #Rain #Flood
Mayoorikka
2 years ago
சீரற்ற வானிலை: கிளிநொச்சியில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவிய சீரற்ற வானிலையால் சீரற்ற வானிலையால் 1661 குடும்பங்களை சேர்ந்த 5204 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 21 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

 இன்று காலை 08.30 க்கு வெளியிடப்பட்ட புள்ளி விபரத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

 அதன் அடிப்படையில், கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுகளிலேயே இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கரைச்சி பிரதேச செயலாள் பிரிவில், 445 குடும்பங்களை சேர்ந்த 1452 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 05 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

 கண்டாவளை பிரதேச செயலாள் பிரிவில், 1216 குடும்பங்களை சேர்ந்த 3752 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 16 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அப்புள்ளி விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 வெள்ளம் வடிந்து வரும் நிலையில், தொடர்ந்தும் புள்ளி விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றது. 

இதேவேளை, பாதிக்கப்பட்டவர்கள் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. தொடர்ந்தும் மக்கான எதிர்வு கூறல் உள்ளமையால், மக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் வங்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4