பல இலட்சம் வாக்குகளுடன் மீண்டும் ஆட்சிபீடம் ஏறுவார் ரணில்!

#SriLanka #Ranil wickremesinghe #President
PriyaRam
2 years ago
பல இலட்சம் வாக்குகளுடன் மீண்டும் ஆட்சிபீடம் ஏறுவார் ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பல இலட்சம் வாக்குகளை பெற்று மீண்டும் ஆட்சிபீடம் ஏறுவார் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒரு அரசியல்வாதி என்பதை விட பொருளாதார நிபுணராக இருப்பதால், நாட்டை முன்னேற்ற வேண்டிய தெளிவான பார்வை அவரிடம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

images/content-image/2023/12/1702889560.png

நாடு எங்கு இருக்க வேண்டும் என்ற தெளிவான பார்வையுடன் அவர் செயற்படுவார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போதைய எதிர்க்கட்சியும் தங்களுடையது என தெரிவித்த வஜிர அபேவர்தன, இறுதி நேரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4