நுவரெலியா மாவட்டத்தில் மாணவிகளை துஷ்பிரயோகப்படுத்திய ஆசிரியர் கைது
#SriLanka
#School
#Arrest
#NuwaraEliya
#Sexual Abuse
#students
#sri lanka tamil news
#Teacher
Prasu
2 years ago
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மூன்று மாணவிகளை பாடசாலையின் ஆய்வு கூடத்தில் வைத்து துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தில் அதே பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிதுல்லே பல்லேதோவ பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதுடைய திருமணமான ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த ஆசிரியர் மாணவி ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளதுடன், அந்த மாணவியின் ஊடாக ஏனைய மாணவிகளும் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.