வன்னியில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் வியாபாரம்!

#SriLanka #Arrest #Vanni #drugs #School Student
Mayoorikka
2 years ago
வன்னியில் பாடசாலை  மாணவர்களை இலக்கு வைத்து போதைப்  பொருள் வியாபாரம்!

புதுக்குடியிருப்பு பகுதியில் பாடசாலை மாணவர்களையும், இளைஞர்களையும் இலக்கு வைத்து போதை மாத்திரை வியாபாரம் செய்து வந்த முக்கிய சந்தேக நபர் 300 போதை மாத்திரைகளுடன் புதுக்குடியிருப்பு பொலிசாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

 புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆடைதொழிற்சாலை ஊழியர்களை இலக்கு வைத்து குறித்த சந்தேக நபர் போதை மாத்திரை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இன்று புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெரத் தலைமையிலான பொலிசார் இன்றையதினம் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த சந்தேக நபர் 300 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

images/content-image/2023/1703218487.jpg

 குறித்த நபரை பொலிசார் கைது செய்வதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட போதும் பொலிசாரின் பிடியிலிருந்து தப்பி செல்ல முற்பட்டு பொலிசார் மீதும் தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 புதுக்குடியிருப்பு நேசன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு போதை மாத்திரையின் விலை 250 ரூபாய் விற்கு நகர் பகுதியில் இவர் விற்பனை செய்து வந்துள்ளார். குறித்த சந்தேக நபர் புதுகுடியிருப்பு பகுதியில் பல்வேறுபட்ட இடங்களில் போதை மாத்திரை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


 சந்தேக நபரையும் போதை மாத்திரைகளையும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முறபடுத்தவுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிசார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4