நடிகர் தனுஷ் இயக்கும் மூன்றாவது படம் குறித்த அறிவிப்பு

#India #Actor #TamilCinema #Director #Tamilnews #X
Prasu
2 years ago
நடிகர் தனுஷ் இயக்கும் மூன்றாவது படம் குறித்த அறிவிப்பு

நடிகர் தனுஷ் இயக்கும் மூன்றாவது படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. இது தொடர்பாக நடிகர் தனுஷ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், DD3மற்றும் 24.12.23 என்ற எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன. 

இத்துடன் கடற்கரையில் காலியாக இருக்கும் பென்ச்-இன் புகைப்படம் உள்ளது. இவைதவிர படம் தொடர்பாக வேறு எந்த தகவலும் இடம்பெறவில்லை. 

images/content-image/1703268309.jpg

மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

அந்த வகையில் தனுஷ் இயக்கும் மூன்றாவது படம் குறித்த இதர தகவல்கள் டிசம்பர் 24-ம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4