ஐக்கிய மக்கள் சக்தியில் ஏற்படவுள்ள மாற்றம்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
ஐக்கிய மக்கள் சக்தியில் ஏற்படவுள்ள மாற்றம்!

அடுத்த வருடம் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ளும் வகையில் பொதுக் கூட்டமைப்பை உருவாக்கும் அதிகாரத்தை கட்சியின் தலைவருக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். 

ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக் கூட்டத்தில் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி எதிர்வரும் வருடத்திற்கான மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் பல வேலைத்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அக்கட்சியின்,  பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, ஜி.எல்.பீரிஸுக்கு பிரதமர் பதவியை வழங்குவது தொடர்பில் இதுவரை இணக்கப்பாடு எட்டப்படவில்லை எனவும்  தெரிவித்தார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4