கச்சா எண்ணெய் கப்பல் மீது டிரோன் தாக்குதல்
சவுதி அரேபியாவில் உள்ள ஒரு துறைமுகத்தில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு கர்நாடக மாநிலம் மங்களூரு நோக்கி லைபீரியா நாட்டு கொடியுடன் எம்.வி. செம் புளூட்டோ என்ற சரக்கு கப்பல் வந்து கொண்டிருந்தது.
இஸ்ரேல் நாட்டுடன் தொடர்புடைய இந்திய பெருங்கடல் பகுதியில் குஜராத் வெராவத் நகரில் இருந்து சுமார் 200 மைல் தூரத்தில் வந்து கொண்டிருந்த போது அந்தக் கப்பல் மீது திடீரென டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனால் கப்பலில் தீப்பற்றியது. உடனடியாக அந்த தீ அணைக்கப்பட்டது. இதில் கப்பலின் ஒரு பகுதி சேதம் அடைந்தது. டிரோன் தாக்குதலின் போது கப்பலில் வெடிவிபத்து ஏற்பட்டு தீப்பிடித்துக் கொண்டதாக தகவல் வெளியானது.
பின்னர் தான் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது தெரியவந்தது. அந்த சரக்கு கப்பலில் 21 இந்திய பணியாளர்கள் மற்றும் ஒரு நேபாளி ஆகியோர் இருந்தனர்.அரபிக்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது நடந்த இந்த தாக்குதல் இந்தியாவை குறிவைத்து நடத்தப்பட்டதா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், ஏமனில் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வரும் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்த டிரோன் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.