சுவிஸ் மக்கள் உணவில் பன்றி இறைச்சியை படிப்படியாக குறைத்துள்ளனர்! ஆய்வில் தகவல்.
சுவிஸ் மக்கள் என்றாலே இறைச்சி மற்றும் உருளைக்கிழங்கை உணவாக அதிகம் பயன்படுத்துகின்றனர் என சுவிஸ் நாட்டில் வாழ்பவர்களுக்கு அறிந்த விடையம்.
சுவிஸ் நாடு பெரும் வசதி படைத்த செல்வந்தர்கள் வாழும் நாடாக கருதப்பட்டாலும் பலர் அன்றாடம் உழைப்பில் வாழ்பர் வாழும் நாடாகவும் காணப்படுகிறது.
குறிப்பாக பண்ணை வைத்து நடத்துகின்றவர்கள் அதிகமானோர் பன்றி இறைச்சியை தினம் உண்பவர்களாகவே காணப்படுகிறார்கள். ஏதாவது தினங்கள் மட்டுமே மாடு, ஆடு, போன்ற இறைசியை உண்கின்றனர். மான், மரை இறைச்சிகளை குளிர் காலங்களில் உண்பது வழக்கம்.
பன்றியின் முடி, நகம், மலம் தவிர மிகுதியான அனைத்தையும் உண்கிறார்கள். இரத்தம், தோல், எலும்பு, ஈரல், குடல் இப்படி அனைத்துப் பாகங்களையும் வித விதமக பதம் செய்து, சமைத்தும், வாட்டியும், பொரித்தும், உலர்த்தியும் உண்கிறார்கள்.
இது இதுவரை நாம் கண்டதும் நடை முறையில் நடக்கும் பழக்கம் அல்லது வழமையாகும். ஆனால் சுவிஸ் நாட்டிலும் பீயோ உணவுகள் அறிமுகமான பின்னர் பலர் சைவ உணவை உண்கிறார்கள்.
அதைத் தாண்டி இளையவர்கள் முதல் பெரியோர்கள்வரை வெகான் எனப்படும் மிருக பாலையும் தவிர்த்து உண்ணும் தாவர உணவையும் உண்கிறார்கள்.
இவர்கள் மாட்டு, ஆட்டுப் பால் போன்ற பால் வகைகளைக்கூட உண்ணாமல் சோயா பால், பாதாம் பால் போன்றவற்றை உண்கிறார்கள். வெகான் உணவுகள் தற்பொழுது சுவிஸ் மக்களிடையே பிரபல்யமாகி வருகிறது. வெகான் உணவுகளின் விலை 35 சுவிஸ் பிராங்குகளுக்கு மேல் விற்பனையாகின்றது.
உதாரணத்துக்கு ஒரு வெகான் மாங்காய் கறி 28 சுவிஸ் பிராங்குகள் ஆகும். இருந்தும் மக்கள் அதன் ஆரோக்கியத்தை உணர்ந் து அதிகம் உண்பதை அறியலாம்.
இப்பொழுது மக்கள் எது நல்ல ஆரோக்கியத்தை தரும் உணவு என வகைப்படுத்தும்பொழுது மாமிசம், மீன்களை உண்பதை குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
அதுவும் பன்றியை எடுத்துக்கொண்டால் பன்றி இறைச்சியை அதிகப்படுத்த பன்றிகளுக்கு கழிவு மரக்கறிகள், மாமிச கழிவுகள், எலும்புகள், கொழுப்புக் கூடிய சோளம் என ஆரோக்கியம் அற்ற உணவைக் கொடுத்து அவற்றை இறச்சியாக்கி மக்களுக்கு மலிவாக கொடுப்பதால் அதை உண்பவர்கள் பலர் எடை அதிகரிப்பாலும் தொற்று நோயாலும் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வு ஒன்று அல்ல பல ஆய்வுகள் கூறுகின்றன.
பன்றி மட்டுமல்ல மாமிசத்தையும், ஏன் இரசாயண பசளை போட்டு வளர்க்கும் மரக்கறிகளையும் மக்கள் வெறுக்கின்றனர். இதற்கு ஆதாரமாக சுவிஸ் நாட்டில் BIO இறைச்சிக்கடைகள், BIO தாணியக்கடைகள், BIO மரக்கறிக்கடைகள் அதிகமாகிக்கொண்டு வருகின்றன.
புலம்பெயர்ந்த தமிழர்கள் பலர் சைவர்களாக சுவிஸ் வந்து பன்றிப் பிரியர்களாக மாறி இப்பொழுது மீண்டும் சுத்த சைவர்களாக இருப்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
இதே வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே மீன்களை உண்ட சுவிஸ் நாட்டவர்கள். மீன்களையும் மக்கள் மிக குறைவாக உண்பதாக கூறப்படுகிறது. காரணம் கடலில் பல நாடுகள் கழிவு எண்ணைகளையும், பொலித்தீன் கழிவுகளையும் போடுவதால் அதனை மீன் உண்டு வளர்வதால் அதை மக்கள் உண்பதால் பல வைரஸ் நோய்களால் தாக்கப்படுவதாக ஆய்வு கூறுகிறதாம்.
அதனால் அதனையும் சுவிஸ் மக்கள் உணவில் நிராகரிக்கின்றார்கள் என்பதை நாம் அறியலாம்.
எது எதுவாக இருப்பினும் மக்கள் தாமே உணர்ந்து ஆரோக்கியத்தை கடைப்பிடித்து வாழ்வதால் அச் சந்ததி ஆரோக்கியமாக வாழும் என்பதில் ஐயம் இல்லை.
அத்தோடு இம் மக்கள் தியானம், யோகா போன்றவற்றையும் கற்று வாழ்க்கையில் இணைத்துக்கொள்வதால் மேலும் நல்ல சமூகம் கண் விழிப்பது வெளிச்சமாகிறது.
குறிப்பு:- அதற்காக இவர்கள் மதம் மாறவில்லை.
இது போன்ற நல்ல செய்திகளை அறிய lanka4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்.
செய்தி:- lanka4 ஊடகம் சுவிஸ் பிரிவு.