சுவிட்சர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதற்கு ஆதரவாக 84 சதவீத மக்கள் ஆதரவு
ஜரோப்பிய ஒன்றியத்துடன் சுவிஸ் இணைந்து கொள்வதற்கு 84 வீதமான மக்கள் ஆதரவாக விருப்பம் தெரிவித்துள்ளார்கள். எதிராக வெறும் 16 வீதமான மக்கள் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.
ஆகவே எதிர் வரும் காலங்களில் சுவிஸ் ஜரோப்பிய ஒன்றியத்தில் இணையும் சாத்தியம் உள்ளது. அடுத்த 2024 ம் ஆண்டில் இதற்கான பொது வாக்கெடுப்பு நடைபெற்று தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.
மிகவும் பலமான நெற்றோ கூட்டமைப்பு மற்றும் ஐரோப்பிய திறந்த வெளிச் சந்தை ஆகிய காரணங்களை மையமாக வைத்து சுவிஸ்சின் பூர்வீக குடிமக்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். ஆனால் எங்களைப் போன்ற வந்தேறு குடிகளிற்கே பெரும் பாதிப்பு உண்டாகும்.
(1 ) ஜரோப்பிய வெள்ளை இன பிரான்ஸ் ,ஜேர்மனி, கொலண்ட் வாழ் ஐரோப்பியர்கள் பணிகளிற்கு அமர்த்ப்படுவார்கள்.
(2 ) சுவிசில் வேலை இல்லா நிலை ஏற்படும்.
(3) தனி ஒருவரினது இப்போதைய மாதச் சம்பளம் கால்வாசியாக குறைவடையும்.
சுவிசில் இருக்கும் பூர்வீக குடிகளிற்கு அவர்களினது பூர்வீகச் சொத்துக்கள் தாராளமாக போதுமானதே ஆனால் 20 வீத சதமான வந்தேறு குடிகளே பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
எதுவாயினும் அடுத்த ஆண்டு பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் இனி வரும் காலங்களில் அடிப்படை வசதிகளான உணவு உறையுள் உறைவிடம் இவைகளுடன் மட்டுமே வாழும் பொருளாதாரத்தை காலம் நிகழ்த்தும் போது ஆடம்பர எண்ணங்களிற்கு காலம் வழிவிடுவது கடினமாக இருக்கலாம்.