சூரிச் ஸ்ரீ விஷ்ணு துர்கா பீடம் சார்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட வெள்ள நிவாரணம்
சூரிச் ஸ்ரீ விஷ்ணு துர்கா பீடம் சார்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்திற்கு வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த ஜகத்குரு சுவாமி ஸ்ரீ சரஹனபவ அவர்கள்:
என் அன்பு தமிழ் உறவுகளே அனைவருக்கும் வணக்கம்... கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஏற்பட்ட இயற்கை பேரிடரால் மக்கள் அவதிப்படுவதை நினைத்து மிகவும் மனம் வருந்தி கொள்கிறேன்.
இயற்கைத் தாயின் கோபத்தினால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, மற்றும் தற்பொழுது தென் மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட அதிகன மழையால் வெள்ளம் சூழ்ந்து மக்கள் அனைவரும் பெரும் துயரத்தில் தங்கள் வாழ்வாதாரத்தை அனைத்தையும் இழந்து உயிர் சேதமும் ஏற்பட்டு இருப்பதை அறிந்து மிக வேதனையுடன் இந்த பதிவை பகிர்கிறேன்,
ஏன் என்று சொன்னால் நாங்கள் எல்லாம் சொந்த மண்ணிலே எங்கள் நாடு, நகரம் அனைத்தையும் இழந்து அகதியாக பிழைப்புக்காக சென்ற காலத்தை எண்ணி இந்த நேரத்தில் நான் அதை பார்க்கிறேன்,
அது போலவே இன்று நாம் சொந்த மண்ணிலேயே சொந்த நாட்டிலேயே தமிழர்கள் மீண்டும் உணவுக்காகவும், உடைமைக்காகவும் உரிமைக்காகவும், போராட்டத்தை எண்ணி கஷ்டப்படுவதை பார்த்து இன்னும் ஒரு நொடி என்னை அசைத்துப் பார்க்கிறது.
நான் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் வருங்காலங்களில் மிக ஆபத்தான சூழ்நிலையில் இயற்கை மாற்றங்கள் ஏற்பட போகிறது ஆகவே மனிதர்களை மனிதர்களாக நேசியுங்கள்,கூடீ வாழ்வோம், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வோம், இயற்கை அன்னையை மதியுங்கள், பெற்ற தாய் தந்தையை கவனித்து கொள்ளுங்கள், மனிதநேயத்தோடு இருக்க வேண்டும் என்று உங்களையெல்லாம் அன்போடு இந்த தருணத்தில் நான் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி வணக்கம்
வாழும்போது வாழ்த்துவோம். என்றும் அன்புடன் ஜகத்குரு சுவாமி ஸ்ரீ சரஹனபவ
ஸ்ரீ விஷ்ணு துர்கா பீடாதிபதி-swiss
அகில உலக கம்பன் கழகத் தலைவர்-swiss
உலக அமைதிக்கான தூதர்-korea