சிறையில் உள்ள கணவனுக்கு உதவி செய்ய முயன்ற மனைவி கைது
#SriLanka
#Arrest
#Prison
#drugs
#husband
#wife
#Tamilnews
#lanka4Media
#lanka4.com
#kalutara
Prasu
2 years ago
களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கணவருக்கு ஹெரோயின் போதைப்பொருளை காற்சட்டையின் வார்ட்டிக்குள் மறைத்து கொண்டு சென்ற பெண் ஒருவரை சிறைச்சாலை அதிகாரிகள் கைது செய்து தம்மிடம் ஒப்படைத்ததன் பின்னர் கைது செய்யப்பட்டதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
வாதுவை மொல்லிகொட பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் தனது கணவனுக்கு கொடுப்பதற்காக காற்சட்டை ஒன்றை கொண்டு வந்ததாகவும், அதனை சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் சோதனை செய்த போது அந்தக் காற்சட்டையின் ஓரத்தில் 440 மில்லிகிராம் ஹெரோயின் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.