உயர்தர மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு!

#SriLanka #exam #Lanka4 #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
2 years ago
உயர்தர மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு!

கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ளது.

மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு வருவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் செய்யப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கும் போதே அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார்.

images/content-image/2023/12/1704194821.jpg

நிலவும் மழையுடனான வானிலை மற்றும் வௌ்ள நிலைமை காரணமாக கெக்கிராவ மடாட்டுகம ரேவத வித்தியாலயத்திற்கான பரீட்சை மத்திய நிலையத்தை மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை அனுமதி அட்டைகள் இதுவரை கிடைக்கப்பெறாத பரீட்சார்த்திகள், பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக அதனை தரவிறக்கம் செய்ய முடியுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!