சுவிற்சர்லாந்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்ற மாபெரும் கலைநிகழ்வு!
சுவிற்சர்லாந்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்ற மாபெரும் கலைநிகழ்வு தமிழ் மின்னல் இசைக்குழுவின் இயக்கத்தில் நடாத்தப்பட்ட வணக்கம்தமிழா MegaNite நிகழ்வில் Swiss Singer பாடல் போட்டி நடாத்தப்பட்டது.
பாடகபாடகிகள் மூன்று பிரிவுகளாக போட்டியிட்டார்கள் ஒவ்வொரு பிரிவிலும் மூவர் தெரிவுசெய்யப்பட்டு கேடயம்வழங்கி மதிப்பளிக்கப்படார்கள். இவ்வருடம் பிரான்ஸ், லண்டன் ஆகிய நாட்டிலிருந்தும் போட்டியாளர்கள் கலந்கொண்டு சிறப்பித்திருந்தனர்.
Mega Nite23 வது நிகழ்வின் சிறப்பு விருந்தினராக தாயகத்திலிருந்து சங்கீதபூசணம் TMS குரல் புகழ் நாகமுத்து ரகுநாதன் அழைக்கப்படார். அத்துடன் ஐரோப்பிய இளம் இசையமைப்பாளர் பிறின்ஸ் ஆகியோர் நடுவர்களாக இருந்து பாடகர்களை தெரிவு செய்தனர்.
சுவிஸ் தமிழ்மின்னல் இசைக்குழுவின் ஒருங்கிணைப்பில் தமிழ்நாட்டின் திரை மற்றும் மேடை இசையமைப்பாளர் ஐீவராசவுடன் தாயகத்துக்கலைஞன் சாரங்கா பாணு மற்றும் ஜேர்மன் நாட்டிலிருந்து ஜெரிக் ஆகியோருடன் சுவிஸ் தபேலா விஐி றம்ஸ் பிரகாஸ் இணைவில் தமிழ் மின்னல் இசைக்குழுவின்நேரடி இசைநிகழ்ச்சி ரசிகர்களின் பாராட்டையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு குழப்போட்டிமுடிவிலும் நடனக்குழுவினரின் நடனம் இடம்பெற்றது இசைக்குழுப்பாடல்கள் வரவேற்பை பெற்றிருந்தது. அத்துடன் ரகுநாதனின் பாடல்களும் சிறப்பாகப்பேசப்பட்டது நிகழ்ச்சி தொகுப்பு மு.பாஸ்கரன் பா.பிரபா நீண்டகாலத்தின்பின் 100%நேரடி இசைநிகழ்ச்சியை பார்த்து ரசித்ததாக ரசிகர்கள் கூறிச்சென்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்நிகழ்வில் நிகழ்வில் கலைஞர் நாகமுத்து ரகுநாததன் அவர்களுக்கு உலகப்பாடகன் வாழ்நாள் சாதனையாளன் என விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டார்.
நிகழ்வில் கலைஞர் நாகமுத்து ரகுநாதன் அவர்களுக்கு உலகப்பாடகன் வாழ்நாள் சாதனையாளன் என விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டார். தாளவாத்தியக்கலைஞன் சாரங்கா பாணு
ஐீவராஐா, சுருதி ஐீவராஐா உலக மேடை இசையமைப்பாளர் என விருது கொடுத்து மதிப்பளிக்கப்பட்டார்.