வவுனியா வைத்தியசாலையில் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு
#SriLanka
#Covid 19
#Vavuniya
#Death
#Hospital
#Tamilnews
#Patients
#lanka4Media
#lanka4.com
Prasu
2 years ago
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளி ஒருவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தநபர் சிறுநீரகநோய் காரணமாக வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த நபர் நேற்றைய தினம் உயிரிழந்திருப்பதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தநபர் 55 வயதுடைய அனுராதபுரம் பதவியா பிரதேசத்தை சேர்ந்தவர்.
என்டிஜன் பரிசோதனையின் ஊடாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.