61 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடும் கொடை வள்ளல் நாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
நற்பணி நாயகன் கொடை வள்ளல் எஸ்.கே. நாதன் அவர்களின் மக்கள் பணிக்கு புத்தகவையில் வாழ்த்துக்கள்.
கிளிநொச்சி S.K முதியோர் இல்லம், S.K.அறிவுச்சோலை சிறுவர் இல்லம், S.K.நாதன் அறக்கட்டளை, காரைநகர் S.K நாதன் நற்பணிமன்ற பணிப்பாளரான சுப்பிரமணியம் கதிர்காமநாதன் (சுவிஸ் பிரபல வர்த்தகர்) இன்றுவரை எண்ணிலடங்காத மக்களுக்கான மருந்துவ , அத்தியாவசிய, வாழ்வாதார, கல்வி சேவையை ஆற்றி வரும் இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பரிசோதனை ஆய்வு கூடத்துக்கு ஒரு புதிய PCR பரிசோதனை செய்யும் Automated RNA Extractor இயந்திரம் வழங்கிய தொழிலதிபர் S.K. இயந்திரத்தினுடைய பெறுமதி 4.65 மில்லியன். இங்கே இதை எடுத்து வருவதற்கு இந்த செலவில் மொத்தமாக 4.8 மில்லியன் ஆகியுள்ளது.
இவற்றை விட முன்னர் திரு. எஸ்.கே. நாதன் அவர்களின் ரூ.52 மில்லியன் (ரூ.5.2 கோடி) நன்கொடையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் முறிவு சிகிச்சை விடுதி மற்றும் கண் சத்திரசிகிச்சை விடுதிக்கான வேலைகள் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டு வருகின்றன.

மேலும் 3.5 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான Video Laryngoscope இரண்டினை யாழ் போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை கூடத்திற்கு வழங்கினர். மேலும் ஏற்கனவே நாதன் அண்ணாவின் நிதி பங்களிப்பில் 2 கோடி ரூபாயில் புதிய CT scanner இயந்திரம் (கணினி வழி உடல் உறுப்பு ஊடுகதிர் படக்கருவி ) யாழ் போதனா வைத்தியசாலைக்கு 12.10.2019 வைபவ ரீதியாக பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இது தவிர முன்னர் கொரேனா தடுப்புக்கான தற்காப்பு அங்கிகளை கொள்வனவு செய்வதற்கும் அதனோடு தொடர்புடைய செயற்பாடுகளுக்கும் அன்பளிப்பை வழங்கப்பட்டது. இந்த உதவிப் பணிகளைத் தவிர, மேலும் பேரிடர் கால நெருக்கடிகளுக்கான உதவிகள், மாணவர்களுக்கான கல்வி உதவி நிதி மருத்துவத்துக்கு, வாழ்வாதாரத்துக்கு, தொழில் துறைக்கு, பண்பாட்டு வளர்ச்சிக்கு, உணவுக்கு என பல வகையான உதவிகள்.
மனிதாபிமானத்தோடு உதவிப் பணிகளைச் செய்து வரவருகின்ற எஸ்.கே.நாதன். நாதன் அண்ணாவின் சொந்த ஊர் காரைநகர். ஆனால் அவர் தற்போது சுவிற்சர்லாந்திலே வசிக்கிறார். அங்கே அவர் ஒரு பெரிய தொழிலதிபர். தன்னுடைய வருகையில் ஒரு பகுதியை இங்கே நாட்டுக்கு வழங்கி வருகிறார். ஏற்கனவே கிளிநொச்சியில் ஒரு முதியோர் இல்லத்தையும் சிறார் பாதுகாப்பில்லம் ஒன்றையும் தனது பொறுப்பில் இயக்கி வருகிறார்.

கடந்த 2023ம் ஆண்டு சித்திரை வரு சித்திரை வருட பிறப்பை முன்னிட்டு 5000 குடும்பங்களுக்கு S.K நாதன் அண்ணா அவர்களினால் உலர் உணவுப்பொதிகள் சாந்தபுரம், அம்பாள் நகர், மலையாளபுரம், பொன்னகர், கிருஸ்ணபுரம், பாரதிபுரம், விநாயகபுரம், அம்பாள்குளம்,விவேகானந்தநகர் உள்ளிட்ட கிராங்களில் வாழும் 5000 குடும்பங்களுக்கு S.K நாதன் அண்ணா அவர்களினால் உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டது.
2023 ம் ஆண்டு S.K.நாதன் அவர்களால் யாழ் போதனா வைத்தியசாலைக்கு Ventilatior machine அன்பளிப்பு புதிதாய் பிறந்த சிசுக்களிற்கான அதி திவிர சிகிச்சை பிரிவிற்கு (NICU) ரூபா 12.5 மில்லியன் பெறுமதியான Neonatal ventilator (High Frequency) Fabian HFOi இனை இன்று S.K.நாதன் அவர்கள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அன்பளிப்பு செய்துள்ளார்.
கிளிநொச்சி S.K முதியோர் இல்லம், S.K.அறிவுச்சோலை சிறுவர் இல்லம் காரைநகர் S.K நாதன் நற்பணிமன்ற ஆகியவற்றின் பணிப்பாளரான திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் (சுவிஸ் பிரபல வர்த்தகர்) அவர்கள் உலகத்தை ஆட்டிப்படைக்கும் உயிர்கொல்லி நோயான கொவிட்-19 காரணமாக ஊரடங்கு வேளையில் அன்றாடம் தொழில் இல்லாத குடும்பங்களின் நிலையை கருத்தில் கொண்டு கிளிநொச்சி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களுக்கு இதுவரை 7525 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகளை வழங்கியுள்ளார்.
கொரோனா வைரஸ் (கொவிட் 19 உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் பல தர்மகாரியங்களைச் செய்து வரும் திரு.சுப்ரமணியம் கதிர்காமநாதன் மக்களின் தேவைகளைப் புரிந்து தொடர்ச்சியாக வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கான 2000/- ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவிகளை வழங்கி வருகின்றார். அவரது பணிகள்
வருமாறு,
1.15.03.2020 காரைநகரில் மணற்காட்டு அம்பாள் ஆலயத்திற்கு அருகாமையில் 500 குடும்பங்களுக்கு இவ்வுதவிகள் வழங்கிவைக்கப்பட்டது.
கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்திற்கு 504 குடும்பங்களுக்கும் கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்திற்கு 644 குடும்பங்களுக்கும் கிளிநொச்சி கோணாவில் கிராமத்துக்கு 100 குடும்பங்களுக்கும்
24.03.2020 யாழ்ப்பாணம் அரியாலை பகுதிக்கு 500 குடும்பங்களுக்கும் 25.03.2020 கண்டாவளை பிரதேசசெயலர் பிரிவில் 500குடும்பங்களுக்கும்
26.03.2020 காலை கிளிநொச்சி பாரதிபுரம் 350 குடும்பங்களுக்கும் 26.03.2020 காரைநகர் J42 வாழ்வாதார உதவி இன்றி இருந்த 404 குடும்பங்களுக்கு 26.03.2020 மாலை காரைநகர் J44 கிராமசேவையாளர் பிரிவுக்கு வாழ்வாதார உதவி இன்றி இருந்த 300 குடும்பங்களுக்கு
26.03.2020 கிளிநொச்சி கிருஸ்ணபுரம் கிராமத்திற்கு வாழ்வாதார உதவி இன்றி இருந்த சுமார் 300குடும்பங்களுக்கு 27.03.2020 மாலை காரைநகர் J45 கிராமசேவையாளர் பிரிவுக்கு வாழ்வாதார உதவி இன்றி இருந்த 338 குடும்பங்களுக்கு
27.03.2020 காரைநகர் J48 (வட்டார இல 2)கிராமசேவையாளர் பிரிவிலும் வாழ்வாதார உதவி இன்றி இருந்த 474 குடும்பங்களுக்கு
28.03.2020 காரைநகர் J47 (வட்டார இல3)கிராமசேவையாளர் பிரிவிலும் வாழ்வாதார உதவி இன்றி இருந்த 169 குடும்பங்களுக்கு
28.03.2020 மாலை காரைநகர் J41(வட்டார இல 1)கிராமசேவையாளர் பிரிவிலும் வாழ்வாதார உதவி இன்றி இருந்த 129குடும்பங்களுக்கு
28.03.2020 கிளிநொச்சி பொன்நகர் கிராமத்திற்கு வாழ்வாதார உதவி இன்றி இருந்த 520 குடும்பங்களுக்கு
28.03.2020 காரைநகர் J46(வட்டார இல2)கிராமசேவையாளர் பிரிவிலும் வாழ்வாதார உதவி இன்றி இருந்த 125 குடும்பங்களுக்கு
29.03.2020 ஞாயிற்றுக்கிழமை தங்கோடை, பயிரிக்கூடல், மணற்காடு, குமிழங்குழி, சக்கலாவோடை, பூதனடைப்பு, பக்தர்கேணி, களவிலிப்பிட்டி, வேம்படி, வாரிவளவு, கள்ளித்தெரு, மருதபுரம் பிரதேசங்கள் அடங்கிய J40 கிராமசேவையாளர் பிரிவில் வாழ்வாதார உதவி இன்றி இருந்த 288 குடும்பங்களுக்கு
29.03.2020 கிளிநொச்சி அம்பாள் குளம் கிராமத்திற்கு வாழ்வாதார உதவி இன்றி இருந்த 650 குடும்பங்களுக்கு
30.03.2020 திங்கட்கிழமை களபூமி, பாலாவோடை, கணவோடை, விளானை பிரதேசங்கள் அடங்கிய J43 கிராம சேவையாளர் பிரிவில் வாழ்வாதார உதவி இன்றி இருந்த 110 குடும்பங்களுக்கு
30.03.2020 திங்கட்கிழமை தோப்புக்காடு J44 கிராமசேவையாளர் பிரிவில் வாழ்வாதார உதவி இன்றி இருந்த 174 குடும்பங்களுக்கு
30.03.2020 கிளிநொச்சி புதுமுறிப்பு கிராமத்திற்கு வாழ்வாதார உதவி இன்றி இருந்த 316 குடும்பங்களுக்கு
30.03.2020 கிளிநொச்சி செல்வாநகர் கிராமத்திற்கு வாழ்வாதார உதவி இன்றி இருந்த 630 குடும்பங்களுக்கு
01.04.2020 கிளிநொச்சி மாயவனூர் கிராமத்திற்கு வாழ்வாதார உதவி இன்றி இருந்த 520 குடும்பங்களுக்கு
01.04.2020 கிளிநொச்சி தொண்டமாநகர் கிராமத்திற்கு வாழ்வாதார உதவி இன்றி இருந்த 160 குடும்பங்களுக்கு
02.04.2020 கிளிநொச்சி ஆனைவிழுந்தான், வன்னேரிக்குளம் கிராமங்களிற்கு வாழ்வாதார உதவி இன்றி இருந்த 420 குடும்பங்களுக்கு
02.04.2020 கிளிநொச்சி பெரியபரந்தன், கிளிநகரம் கிராமங்களிற்கு வாழ்வாதார உதவி இன்றி இருந்த 322 குடும்பங்களுக்கு
அதுமட்டுமன்றி 26.03.2020 கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கோவிட் 19 தாக்கத்திலிருந்து பாதுகாக்க 5000 Face Mask வழங்கி வைக்கப்பட்டதுடன் இன்று கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு வைத்தியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கான நூறு பாதுகாப்பு உடைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதோடு தனிமையில் வாழும் முதியவர்கள், மற்றும்பெண்கள் தலைமை தாங்கும் நாளாந்த கூலி வேலை செய்யும் எமது உறவுகளுக்கான உலர் உணவு, றோட்டறி கழகத்தின் அங்கத்தவர்களின் நிதிப் பங்களிப்பிலும், திரு.S.K. நாதன் அவர்களது அனுசரணையிலும் வழங்கிவைக்கபட்டது
நற்பணி நாயகன் S.K.நாதன் (திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன்) அவர்களினால் கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரைக்கும் 7525 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. அகவையில் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் பணி மேலும் தொடரட்டும்.