கனடா விமானச் சேவையானது மிகவும் மோசமானது என தெரிவிக்கப்படுகிறது

#Canada #Lanka4 #service #லங்கா4 #AirCraft #lanka4Media #lanka4news #லங்கா4 ஊடகம் #lanka4.com #Lanka4 canada tamil news
கனடா விமானச் சேவையானது மிகவும் மோசமானது என தெரிவிக்கப்படுகிறது

மிக மோசமான நேர முகாமைத்துவத்தைக் கொண்ட விமான சேவை நிறுவனங்களில் ஒன்றாக எயார் கனடா விமான சேவை நிறுவனம் பட்டியலிடப்பட்டுள்ளது.

 கடந்த 2023ம் ஆண்டில் வட அமெரிக்க நாடுகளில் இயங்கி வரும் பத்து பெரிய விமான சேவை நிறுவனங்களில் எயார் கனடா நிறுவனம் மிக மோசமானது என தெரிவிக்கப்படுகின்றது.

images/content-image/1704291735.jpg

 கனடாவின் மிகப் பெரிய விமான சேவை நிறுவனமான எயார் கனடா நிறுவனம் 63 வீதமான விமானங்கள் மட்டுமே சரியான நேரத்தில் பயணம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சிரிகும் என்ற வான் போக்குவரத்து ஆய்வு நிறுவனம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

 சுமார் 140000 விமானங்கள் கடந்த ஆண்டு காலம் தாழ்த்தப்பட்டதாகவும், நேர முகாமைத்துவம் பேணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட அமெரிக்க பிராந்திய வலய நாடுகளின் சிறந்த சேவை வழங்கும் விமான சேவையாக டெல்டா விமான சேவை நிறுவனம் பட்டியலிடப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4