வடக்கிற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ரணில்!

#SriLanka #Jaffna #Ranil wickremesinghe #Lanka4 #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
2 years ago
வடக்கிற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ரணில்!

நான்கு நாட்கள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் இன்று வடமாகாணத்திற்கு செல்லவுள்ளார்.

இதற்கமைய இன்று யாழிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி மாலை 3.00 மணி முதல் 5.30 வரை யாழ் மாவட்டச் செயலகத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து மாலை 7.00 மணி முதல் 9.30 வரை தனியார் விடுதியில் சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்திக்கவுள்ளதாகவும், 5ஆம் திகதி காலையில் வவுனியா மாவட்டச் செயலகத்தில் இடம்பெறும் வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிற்கான விசேட அபிவிருத்திக்குழுக் கூட்டத்திலும் மாலை 2.00 மணி தொடக்கம் 3.00 மணிவரையில் பூநகரிப் பிரதேச அபிவிருத்தி மற்றும் நகரமயமாக்கல் தொடர்பில் பூநகரிப் பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ள கூட்டத்திலும் கலந்து கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

images/content-image/2023/12/1704343184.jpg

இதனையடுத்து மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இளைஞர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார் எனவும் 6 ஆம் திகதி காலை 9.00 மணிமுதல் 10.00 மணிவரையில் யாழ் மாவட்டச் செயலகத்தில் யாழ்ப்பாணம், வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் கிளிநொச்சி அறிவியல் நகர் பீட பீடாதிபதி உள்ளிட்ட விரிவுரையாளர்களை சந்திக்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் 10.00 மணிமுதல் 11.30 வரையில் சர்வ மதப் பிரதிநிதிகள், மீனவ அமைப்புக்கள் ஆகியவற்றுடனும் போதனா வைத்தியசாலையின் நலன்புரி சங்க பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அதனைத் தொடர்ந்து மாலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை மாவட்டச் செயலகத்தில் நிபுணர்களை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார் எனவும், 7 ஆம் திகதி தந்தை செல்வா மண்டபத்தில் பனை தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடனான சந்திப்பினை முடித்து கொண்டு கொழும்புக்குத் திரும்பவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!