வான் லொறியுடன் மோதி விபத்து - தாய் மற்றும் மகள் உயிரிழப்பு

#SriLanka #Death #Accident #Women #Road #Highway #lanka4Media #lanka4.com
Prasu
2 years ago
வான்  லொறியுடன் மோதி விபத்து - தாய் மற்றும் மகள் உயிரிழப்பு

தெற்கு அதிவேக வீதியின் குருந்துகஹஹெதெக்ம பகுதியில் வான் ஒன்று லொறியுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் தாய் மற்றும் மகள் உயிரிழந்துள்ளதாக குருந்துகஹஹெதெக்ம பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் அம்பலாந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த 57 வயதுடைய தாயும் 31 வயதுடைய மகளுமாவர்.

கொழும்பில் இருந்து மாத்தறை பிரதேசத்தை நோக்கி பயணித்த வேன் ஒன்று எதிர் திசையில் பயணித்த லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது வா னில் பயணித்த தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்த அவரது மகள் கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருந்துகஹஹெதெக்ம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4